என்னைப்பற்றி

 ஒரு நிமிஷம்.......

புதுக்கோட்டை மா மன்னர் கல்லூரியில், காலம் சென்ற கவிஞர்.பாலாவின் ஆங்கில இலக்கிய மாணவர்களில் வகுப்பறைக்கே போகாத மாணவர்களில் நானும் ஒருவன்.கல்லூரி நாட்களில் நா.முத்துநிலவன்,கந்தர்வன் மற்றும் த.மு.எ.ச. தொடர்பால் திருச்சி,புதுக்கோட்டை,தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு தீக்கதிர் நாளிதழின் சிறப்பு செய்தியாளராகவும் நமதுநிருபர், விசிட்டர், தூண்டில், மக்கள் மகுடம் போன்ற புலனாய்வு பத்திரிகைகளில் ஃப்ரீலேன்சராக பணிபுரியவும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர்  சிறுபத்திரிகைகள் பக்கம் ஆர்வம் திரும்பியது.கணையாழியில் முதல் சிறுகதை வந்தது.

ஒரு என்ற பெயரில் சிறுபத்திரிகை தொடங்கி அது நான்கு இதழ்கள் வந்தன.

1985-88 ல் விகடன் மாணவ நிருபர் திட்ட நேர்முகத்திற்காக சென்னைக்கு முதல் முறையாக வந்தபோது அந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் நக்கீரன்கோபால் ஆபத்பாந்தவனாக வந்து அவரது ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொண்டார். 

1993 ல் புதியநம்பிக்கை பொன்.விஜயன் தனது சக்தி பதிப்பகம் சார்பாக பாம்புச்சுவடுகள் என்ற என் முதல் கவிதை நூலை வெளியிட்டார்.

அதன்பிறகு துக்ளக்,தினமணி,இதயம் பேசுகிறது, அமுதசுரபி,வாசுகி, தமிழரசி, பெண்டாமீடியாவின் NUM TV ஆகியவற்றில் ஃப்ரீலேன்சராகவும் RAJ TV மற்றும் கேப்பிடல் மார்க்கெட்டில் பணிபுரியவும் வாய்ப்பு கிடைத்தது.

எழுதிய புத்தகங்கள்:

ஜெயநரசிம்மன் கதைகள் - கலைஞன் பதிப்பகம்
எழுத்தாளர்டைரி  - இலக்கிய நேர்காணல்கள்
பெண்ணியம்  சமூகம் - மருதா பதிப்பகம்
ம்கான் ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - விகடன் பிரசுரம்
கேள்விநேரம் - பேட்டிகள்
இவை தவிர கடவுளிடம் பேசும் கவிதைகள் போன்ற ஷிர்டி சாயிபாபா தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளி வந்துள்ளன.

2002 முதல் ஸ்ரீ சாயிமார்க்கம்    என்கிற ஆன்மிக பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து வருகிறேன்.

ஷிர்டிசாயிபாபாவிடம் ஈடுபாடு உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்














No comments: